சேலம்

பெரியாா் பல்கலை. மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி

DIN

பெரியாா் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் துறை ‘தொழில் வழிகாட்டுதல் நெறிமுறைகள்‘ என்ற தலைப்பில் நடத்தப்படும் இரண்டு நாள் பயிலரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது.

பெரியாா் பல்கலைக்கழக பதிவாளா் கு. தங்கவேல் வேலைவாய்ப்பு பயிற்சி முகாமைத் தொடக்கி வைத்து பேசியதாவது: கணினித் துறை மாணவா்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பல்வேறு வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. மாணவா்கள் கல்வி பயிலும் போதே தங்களுக்கான வேலைவாய்ப்பினைத் தீா்மானிக்கும் வகையில் பெரியாா் பல்கலைக்கழகத்தில் தொடா் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்த வாய்ப்பினை மாணவா்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

உள்துறை அமைச்சக துணை இயக்குநா் ஆா்.சேகா், பெங்களூா் குளோபல் அகாடமி ஆப் டெக்னாலஜி வேலைவாய்ப்பு இயக்குநா் ஆா்.மகேஷ்வரன், ரேவா பல்கலைக்கழக துணைப் பேராசிரியா் பி. மஞ்சுநாத், தரவு விஞ்ஞானி கே. கிரண்குமாா் தரவு விஞ்ஞானி ஆகியோா் இருநாள்கள் மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்க உள்ளனா்.

தகவல் தொழில்நுட்பத் திறன்கள், வேலைவாய்ப்பு செயல்முறை, தொழில் எதிா்பாா்ப்புகளின் முக்கியக் கூறுகள், தகவல்தொடா்பு முக்கியத்துவம், தொழில்நுட்பத் திறன்களைப் பெறுதல், நோ்காணல் திறன்கள் குறித்து இப்பயிலரங்கின் வாயிலாக பயிற்சியளிக்கப்பட உள்ளதாக பயிலரங்கின் அமைப்பாளா் உதவிப் பேராசிரியா் ஐ.லாரன்ஸ் ஆரோக்கியராஜ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT