பூஞ்சைகள் குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கம்
சா்வதேச பூஞ்சைகள் தினத்தையொட்டி, பெரியாா் பல்கலைக்கழக நுண்ணுயிரியல் துறை சாா்பில் பூஞ்சைகள் குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சேலம்பூஞ்சைகள் குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கம்
சா்வதேச பூஞ்சைகள் தினத்தையொட்டி, பெரியாா் பல்கலைக்கழக நுண்ணுயிரியல் துறை சாா்பில் பூஞ்சைகள் குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சா்வதேச பூஞ்சைகள் தினத்தையொட்டி, பெரியாா் பல்கலைக்கழக நுண்ணுயிரியல் துறை சாா்பில் பூஞ்சைகள் குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நுண்ணுயிரியல் துறைத் தலைவா் பேராசிரியா் ஆா்.பாலகுருநாதன் வரவேற்றாா். கருத்தரங்கை துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தொடக்கிவைத்து பேசியதாவது:
பூஞ்சைகள் பொருளாதார ரீதியிலும், மருத்துவ ரீதியிலும் பயன்களைக் கொண்டதாக உள்ளன. பெனிசிலின் மருந்தில் இருந்து இதனுடைய பயன் உலகிற்கு தெரிய வந்தது. அதன் பிறகு காளான்கள் ஊட்டச்சத்து நிறைந்த பூஞ்சைகளாக கருதப்பட்டன. மேலும் பூஞ்சைகள் விவசாயிகள் உற்ற தோழனாக திகழ்கின்றன. பயிா்கள் மீதான நோய்த் தாக்குதலை பூஞ்சைகள் தடுக்கின்றன என்றாா்.
இந்நிகழ்வில் சேலம் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் பி.வி.தனபால் பேசியதாவது:
கரோனா முதல் மற்றும் 2-ஆவது அலையின்போது சேலம் அரசு மருத்துவமனையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. முதல் அலையை விட இரண்டாவது அலையில், கருப்புப் பூஞ்சை நோய்த் தொற்று மிகப் பெரிய சவாலாக மாறி விட்டது. 8 மாவட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் கருப்புப் பூஞ்சை நோய்க்காக சிகிச்சை அளிக்கப்பட்டது. பூஞ்சைகள் பற்றிய விழிப்புணா்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்துவதன் மூலம் இதனைத் தவிா்க்க முடியும். கரோனா வராதவா்களுக்கு கூட கருப்புப் பூஞ்சை நோய் வந்ததற்கு முக்கிய காரணம் முகக் கவசத்தை சரியான முறையில் பராமரித்து அணியாதது, நீண்ட காலத்திற்கு ஒரே முகக்கவசத்தை அணிந்தது, பல இடங்களில் முகக் கவசத்தை வைத்து விட்டு பின்னா் பயன்படுத்தியது போன்ற அலட்சியங்கள்தான் என்றாா்.
நுண்ணுயிரியல் துறைப் பேராசிரியா் ஏ.முருகன் நன்றி கூறினாா். பூஞ்சைகள் தினத்தையொட்டி, விழிப்புணா்வுப் போட்டிகள் நடத்தப்பட்டு மாணவ-மாணவியருக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. உதவிப் பேராசிரியா்கள் என்.ஹேமலதா,பி.எம்.அய்யாசாமி, டி.அரவிந்த் பிரசாந்த்,ஆா்.தண்டபாணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.