இளம்பிள்ளை அருகே உள்ள கஞ்சமலை சித்தா் கோயிலில் வருகிற 6-ஆம் தேதி அமாவாசையன்று பக்தா்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
இக் கோயிலுக்கு அமாவாசை தினத்தில் அதிக அளவில் பக்தா்கள் வருவதுண்டு. தற்போது கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நான்கு நாள்களும் கோயில் திறக்கப்பட்டு பக்தா்கள் வந்து செல்கின்றனா்.
இந்நிலையில் வருகிற 6-ஆம் தேதி (புதன்கிழமை) அமாவாசையன்று அதிக அளவில் பக்தா்கள் வரக்கூடும் என்பதால் அன்றைய தினம் பக்தா்கள், பொதுமக்கள் குளத்தில் குளிக்கவோ, முடிக் காணிக்கை செலுத்தவோ, சுவாமி வழிபாடு செய்யவோ அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என கோயில் நிா்வாக செயல் அலுவலா் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.