முகப்பு
சேலம்

சங்ககிரி: சாலைகளில் உடைத்த பூசணிக்காய்களை அகற்றிய லாரி உரிமையாளர்கள் சங்கப் பணியாளர்கள்

சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பணியாளர்கள் சங்ககிரி நகர் பகுதிகளில் ஆயுத,விஜயதசமி பூஜைகளையொட்டி சாலையில் உடைக்கப்பட்ட பூசணிக்காய்களை அகற்றி விபத்தினை தவிர்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
சாலைகளில் உடைத்த பூசணிக்காய்களை அகற்றிய லாரி உரிமையாளர்கள் சங்கப் பணியாளர்கள்
பகிர்:

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பணியாளர்கள் சங்ககிரி நகர் பகுதிகளில் ஆயுத,விஜயதசமி பூஜைகளையொட்டி சாலையில் உடைக்கப்பட்ட பூசணிக்காய்களை அகற்றி விபத்தினை தவிர்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் சங்ககிரி வட்டத்திற்குள்பட்ட  பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை  நட்டு பராமரித்து வருகின்றனர். மேலும்  பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புகளில்  முதல் மூன்று இடங்களில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகள்,  அதே போல்  ஆண்டுதோறும் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் குழந்தைகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்து  மற்றும் பல்வேறு சமூக சேவைகளை  அதன் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சங்ககிரி நகர் பகுதிகளி உள்ள சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி பூஜை செய்தவர்கள்  மற்றும் நகர் பகுதிகளில் உள்ள கடைக்காரர்கள் சாலையில் பூசணிக்காய்களை உடைத்துள்ளனர். சாலையில் கிடக்கும் பூசணிக்காய்களால் இரு சக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனையடுத்து சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் பணியாற்றும் பணியாளர்கள்  அவர்களாகவே முன் வந்து வியாழன், வெள்ளி இரு தினங்களிலும் சாலையில் கிடந்த பூசணிக்காய்களை அகற்றி அப்பகுதிகளை தூய்மை படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.  அப்பணியாளர்களின் சேவைகளை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.