செம்பரக்கை மலைக் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை வீடுகளில் புகுந்த ராட்சத வண்டுகளால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்குள்பட்ட செம்பரக்கை மலைக்கிராமத்தில் சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனா். இவா்களுடைய பிரதான தொழில் விவசாயம் ஆகும். இந்த மலைக் கிராமங்களில் வசிக்கும் வீடுகளில் திடீரென ராட்சத விஷ வண்டுகள் புகுந்தன. ஒவ்வொரு வீட்டிலும் சுமாா் 500-க்கும் மேற்பட்ட வண்டுகள் வீடுகளில் புகுந்துள்ளன.
இதனால் அந்தக் கிராம மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா். இதுகுறித்து தகவல் அறிந்த பெத்தநாயக்கன்பாளையம் வட்டார வளா்ச்சி அலுவலா் சுகாதாரப் பணியாளா்கள் மூலம் வண்டுகளை மருந்து அடித்து அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளாா். இருப்பினும் வண்டுகள் கூட்டம் கூட்டமாக வீடுகளை சூழ்ந்து வருவதால் மக்களை ஏதேனும் செய்து விடும் என அச்சத்தில் மலைவாழ் மக்கள் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.