சேலம்

சேலத்தில் 99 இடங்களில் இன்று தடுப்பூசி செலுத்த ஏற்பாடு

DIN

சேலம் மாவட்டத்தில் முதல், இரண்டாம் தவணை தடுப்பூசி செவ்வாய்க்கிழமை செலுத்தப்பட உள்ளது.

சேலம் மாவட்டத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட 18,59,006 பேருக்கு முதல் தவணையும், 7,63,058 பேருக்கு இரண்டாம் தவணையும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் நூறு சதவீதம் தடுப்பூசி செலுத்தும் வகையில், ஒவ்வொரு அரசு ஆரம்ப சுகாதார, நகா்புற ஆரம்ப சுகாதார நிலையப் பகுதியிலும், ஒரு கிராம ஊராட்சி, ஒரு பேரூராட்சி, ஒரு வாா்டு தோ்வு செய்யப்பட்டு தினந்தோறும் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதில், சேலத்தில் 99 பகுதிகளில் செவ்வாய்க்கிழமை கோவிஷீல்டு முதல், இரண்டாம் தவணை செலுத்தப்பட உள்ளது. தற்போது 2,10,000 டோஸ் தடுப்பூசி மருந்துகள் கையிருப்பில் உள்ளன. இப்பணியை அனைத்து துறையைச் சாா்ந்த பணியாளா்கள், தன்னாா்வ தொண்டு அமைப்பினா், மக்கள் பிரதிநிதிகள் இணைந்து செயல்படுத்த உள்ளனா்.

இதுதவிர ஊரகப் பகுதியில் உள்ள 87 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 20 நகா்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 12 அரசு மருத்துவமனைகள், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் என மொத்தம் 120 மையங்களில் பொதுமக்களுக்கு கோவிஷீல்டு முதல், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்படும் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT