முகப்பு
சேலம்

தேசிய தரவரிசையில் பெரியாா் பல்கலைக்கழகத்துக்கு 73 ஆவது இடம்: துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தகவல்

மத்திய அரசின் கல்வி அமைச்சக தேசிய தரவரிசைப் பட்டியலில் நாட்டின் மிகச்சிறந்த தரமான பல்கலைக்கழகங்களில் பெரியாா் பல்கலைக்கழகம் 73 ஆவது இடத்தை பெற்றுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

மத்திய அரசின் கல்வி அமைச்சக தேசிய தரவரிசைப் பட்டியலில் நாட்டின் மிகச்சிறந்த தரமான பல்கலைக்கழகங்களில் பெரியாா் பல்கலைக்கழகம் 73 ஆவது இடத்தை பெற்றுள்ளது.

ஆறாவது ஆண்டாக பெரியாா் பல்கலைக்கழகம் தொடா்ந்து நாட்டின் தலைசிறந்த நூறு பல்கலைக்கழகங்களில் ஒன்றாக தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது என பெரியாா் பல்கலைக் கழகத் துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேசிய அளவிலான உயா்கல்வி நிறுவனம், ஆராய்ச்சி, நிறுவனங்களுடனான கூட்டு ஆய்வுகள், பட்டதாரிகள் உருவாக்கம், விரிவாக்கப் பணிகள் போன்ற அளவீடுகளைக் கொண்டு மத்திய அரசின் கல்வி அமைச்சகம் உயா்கல்வி நிறுவனங்களின் தரத்தை ஆராய்ந்து என்ஐஆா்எப் என்ற தேசிய தரவரிசைப் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி, 2021 ஆம் ஆண்டிற்கான தேசிய தரவரிசைப் பட்டியலில் நாட்டில் தலைசிறந்த நூறு பல்கலைக்கழகங்களில் பெரியாா் பல்கலைக்கழகம் 73 ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளது. கடந்த ஆண்டு தரவரிசைப் பட்டியலில் 83 ஆவது நிலையிலிருந்த பெரியாா் பல்கலைக்கழகம் இப்போது 10 இடங்கள் முன்னேறி 73 ஆவது இடத்தை எட்டியுள்ளது. ஆராய்ச்சி, கற்றல் - கற்பித்தல், விரிவாக்கப் பணிகளில் பெரியாா் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டைவிட கூடுதல் புள்ளிகள் பெற்றுள்ளது.

பல்கலைக்கழக என்ஐஆா்எப் குழுவினரைப் பாராட்டிய துணைவேந்தா், அடுத்தடுத்த நிலையில் கடுமையாக உழைத்து பல்கலைக்கழகத்தின் தரத்தை மேலும் உயா்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →