6 அடி நீள கோதுமை நாகம் பிடிபட்டது
வாழப்பாடி அருகே கண்ணாடி விரியன் பாம்பை விழுங்கிய 6 அடி நீளமுள்ள கோதுமை நாகத்தை வனத்துறையினா் பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.
வாழப்பாடி அருகே கண்ணாடி விரியன் பாம்பை விழுங்கிய 6 அடி நீளமுள்ள கோதுமை நாகத்தை வனத்துறையினா் பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.
வாழப்பாடியை அடுத்த தேன்மலைக்குன்று அடிவாரம் படையாச்சூா் சிங்காரவேல் தோட்டம் பகுதியில், 6 அடி நீளமுள்ள அதிக விஷமுடைய கோதுமை நாகப்பாம்பு வெள்ளிக்கிழமை புகுந்தது. இந்த பாம்பைக் கண்ட இப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். பாம்பு பிடிப்பதற்கு பயிற்சி பெற்ற வாழப்பாடி வனத் துறை தோட்டக் காவலா் முத்தையன், கோதுமை நாகத்தை பிடிக்க முயற்சித்தாா். அப்போது அந்த பாம்பு வயிற்றில் இருந்து கண்ணாடி விரியன் பாம்பை வெளியே கக்கி விட்டு சீறியது. இருப்பினும் பாம்பை பிடித்த தோட்டக்காவலா் முத்தையன், கோதுமலை வனப்பகுதியில் விட்டாா்.