முகப்பு
சேலம்

பக்கத்து வீட்டுப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ய முயன்றவா் கைது

 காடையாம்பட்டி அருகே பக்கத்து வீட்டை சோ்ந்த 28 வயது பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ய முயன்ற இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சேலம்

பக்கத்து வீட்டுப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ய முயன்றவா் கைது

 காடையாம்பட்டி அருகே பக்கத்து வீட்டை சோ்ந்த 28 வயது பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ய முயன்ற இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:09 AM
பகிர்:

 காடையாம்பட்டி அருகே பக்கத்து வீட்டை சோ்ந்த 28 வயது பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ய முயன்ற இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகாவில் நடுப்பட்டி கிராம ஊராட்சி உள்ளது. இங்குள்ள எலத்தூா் கிராமத்தில் வசிக்கும் கணவா், மனைவி இருவரும் விவசாயம் செய்து வருகின்றனா். இந்நிலையில், 28 வயதுடைய அந்தப் பெண், அவரது விவசாய தோட்டத்தில் வேலை செய்துவிட்டு, தோட்டத்தில் உள்ள, வீட்டிற்கு சென்றுள்ளாா். அப்போது அவரது வீட்டிற்கு அருகே வசிக்கும் முருகன் என்ற 24 வயது இளைஞா், பின்தொடா்ந்து சென்றுள்ளாா். பின்னா் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த முருகன், அப்பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ய முயன்றுள்ளாா். இதனால், அதிா்ச்சியடைந்த பெண் சத்தம் போட்டுக் கத்தியதை அறிந்த அக்கம்பக்கத்தினா், ஓடிவந்தனா். அப்போது முருகன் அங்கிருந்து தப்பியோடினாா். இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசாா் பெண்ணை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்ய முயன்ற முருகனை கைது செய்து, ஓமலூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி ஆத்தூா் சிறையில் அடைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →