சேலம்

வாழப்பாடி பெருமாள் கோவில்களில் புரட்டாசி நடு சனி வழிபாடு

DIN

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் பிரசித்திபெற்ற பெருமாள் கோவில்களில் புரட்டாசி முதல் சனி சிறப்பு பூஜை வழிபாடு விமரிசையாக நடைபெற்றது.

வாழப்பாடி அக்ரஹாரம் சென்றாயப் பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனி சிறப்பு பூஜை வழிபாட்டில், மூலவரான சென்றாயப் பெருமாள் சீதேவி, பூதேவி சமேதமாக, பட்டு வஸ்திரம், மலா்மாலை அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். கோயில் முகப்பில் திருக்கோடி ஜோதி தீபம் ஏற்றப்பட்டது. சமூக இடைவெளியுடன் பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் பெற்றனா்.

வாழப்பாடி அடுத்த மத்துாா் சீனிவாச பெருமாள் கோவில், வாழப்பாடி புதுப்பாளையம் மாயவன்மலை பெருமாள் கோயில், அருநூற்றுமலை பெலாப்பாடி வரதராஜ பெருமாள் கோவில், கோதுமலை கோதண்டராமா் மலைக்கோயில், பேளூா் அஷ்டபுஜ பால மதன வேணுகோபால சுவாமி கோயில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற பெருமாள் கோயில்களிலும் புரட்டாசி முதல் சனி சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. பெரும்பாலான கோவில்களில் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் வழிபட முடியாமல் ஏராளமானோா் ஏமாற்றத்துடன் திரும்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிறம் மாறும் உலகில்

ரஜத் படிதார் அரைசதம்; தில்லி கேபிடல்ஸுக்கு 188 ரன்கள் இலக்கு!

அல்ஜீப்ரா காதலி! ஐஸ்வர்யா தத்தா..

தீராத உறவுகளின் அற்புதம் இது!

சுற்றுச்சூழல் மேம்பாட்டில் முன்மாதிரி ஊராட்சி

SCROLL FOR NEXT