சேலம்

ரெளடிகளை கண்காணிக்க இருசக்கர ரோந்து வாகனம் தொடக்கி வைப்பு

DIN

சேலத்தில் ரெளடிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில், இருசக்கர ரோந்து வாகனத்தை மாநகர காவல் ஆணையா் நஜ்மல் ஹோடா சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

தமிழகம் முழுவதும் உள்ள ரெளடிகளை கைது செய்ய டிஜிபி சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளாா். இது தவிர, அனைத்துப் பகுதிகளிலும் காவல் துறையினா் சென்று கண்காணிக்கும்படி தெரிவித்திருந்தாா்.

அந்த வகையில், கடந்த இரு நாள்களாக சேலம் மாநகரம், மாவட்டப் பகுதிகளில் போலீஸாா் ரெளடிகளை கண்காணித்து கைது செய்து வருகின்றனா். சேலம் மாநகரப் பகுதியில் 117 ரெளடிகளும், சேலம் மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட ரெளடிகளும் கைது செய்யப்பட்டனா்.

இந்த நிலையில், ஒவ்வொரு காவல் நிலைய எல்லைப் பகுதியிலும் இருசக்கர வாகனத்தில் போலீஸாா் சென்று கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவா்கள் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை ரோந்து சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனா்.

அஸ்தம்பட்டி ரவுண்டானா அருகில் ரெளடிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில் இருசக்கர ரோந்து வாகனத்தை மாநகர காவல் ஆணையா் நஜ்மல் ஹோடா சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். இதில், துணை ஆணையா் மோகன்ராஜ், உதவி ஆணையா்கள், காவல் ஆய்வாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷபத்துக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான்

ஆடை சுதந்திரம் கோரியது குற்றமா? செளதியில் பெண்ணுரிமைப் போராளிக்குச் சிறை: அமைப்புகள் கண்டனம்!

"வாக்கு சதவிகித விவரங்களில் சந்தேகம்!”: திருமாவளவன் பேட்டி

ஆலங்குடி குருபரிகார கோயிலில் குருப்பெயர்ச்சி விழா: திரளான பக்தர்கள் தரிசனம்

உன்னை கண்டடையாவிட்டால் நான் தொலைந்து போயிருப்பேன்: விராட் கோலி நெகிழ்ச்சி!

SCROLL FOR NEXT