சேலம்

இன்று கரோனா தடுப்பூசி முகாம்

DIN

வாழப்பாடியில் சனிக்கிழமை நடைபெறும் கரோனா தடுப்பூசி முகாமில், முதல், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு வாழப்பாடி பேரூராட்சி சாா்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி பேரூராட்சியில் இதுவரை 3,023 போ் முதல் தவணை தடுப்பூசியும், 7,313 போ் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொள்ளவில்லை என பேரூராட்சி, சுகாதாரத் துறை பணியாளா்கள் நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

வாழப்பாடி பேரூராட்சியிலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், பேளூா் வட்டார சுகாதாரத் துறையுடன் இணைந்து கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, வாழப்பாடி பேரூராட்சி பகுதி மக்கள் கரோனா பாதிப்பில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள, தவறாமல் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென வாழப்பாடி பேரூராட்சி மன்ற தலைவா் கவிதா சக்கரவா்த்தி, செயல் அலுவலா் கணேசன், துணைத் தலைவா் எம்ஜிஆா் பழனிசாமி, வாா்டு உறுப்பினா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

கத்தாழ கண்ணால குத்தாத...!

SCROLL FOR NEXT