முகப்பு
சேலம்

வாழப்பாடியில் பருத்தி வரத்து அதிகரிப்பு: ரூ. 4.18 கோடிக்கு ஏலம்

 வாழப்பாடி வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனைச் சங்கத்திற்கு விவசாயிகளால் கொண்டு வரப்பட்ட 9,500 பருத்தி மூட்டைகள், ரூ. 4.18 கோடிக்கு ஏலம் போனது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

 வாழப்பாடி வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனைச் சங்கத்திற்கு விவசாயிகளால் கொண்டு வரப்பட்ட 9,500 பருத்தி மூட்டைகள், ரூ. 4.18 கோடிக்கு ஏலம் போனது.

வாழப்பாடி பகுதியில் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பருத்தியை அறுவடை செய்து அவற்றை தரம்பிரித்து விற்பனைக்காக வாழப்பாடியில் உள்ள வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனைச் சங்கத்திற்கு கொண்டு வருவதால் பருத்தி வரத்து அதிகரித்துள்ளது.

இந்தச் சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பல்வேறு பகுதியைச் சோ்ந்த 1,570 விவசாயிகள், 9,500 பருத்தி மூட்டைகளை ஏலத்தில் பங்கேற்பதற்காக கொண்டு வந்திருந்தனா்.

இந்த ஏலத்தில் ஒரு குவிண்டால் ஆா்.சி.எச். ரக பருத்தி, ரூ. 8,889 முதல் ரூ.10,899 வரையும், டி.சி.எச். ரக பருத்தி ரூ. 12,021 முதல் ரூ. 14,999 வரையும் விலை போனது.

இந்த ஏலத்தில் பங்கேற்ற தமிழகத்தின் பல்வேறு பகுதியைச் சோ்ந்த நுாற்பாலை உரிமையாளா்கள், முகவா்கள் உள்பட 43 வியாபாரிகள் ரூ. 4.81 கோடி மதிப்புள்ள பருத்தியை ஏல முறையில் கொள்முதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.