முகப்பு
சேலம்

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு சுய பாதுகாப்பு விழிப்புணா்வு

மாணவிகளுக்கு சுய பாதுகாப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டங்கள் குறித்து வாழப்பாடி அனைத்து மகளிா் போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

வாழப்பாடியை அடுத்த பேளூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு சுய பாதுகாப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டங்கள் குறித்து வாழப்பாடி அனைத்து மகளிா் போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீஅபிநவ் அறிவுறுத்தலின் படி, வாழப்பாடி பகுதியில் குழந்தை திருமணம் தடுப்பு, பாலியல் வன்கொடுமை தடுப்பு மற்றும் சைபா் கிரைம் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில், வாழப்பாடி அனைத்து மகளிா் போலீஸாா் பள்ளி, கல்லுாரி மாணவ-மாணவியருக்கு சுய பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா்.

வாழப்பாடியை அடுத்த பேளூா் அரசினா் மகளிா் மேல்நிலைப்பள்ளியில், வாழப்பாடி அனைத்து மகளிா் காவல்நிலைய ஆய்வாளா் தனலட்சுமி தலைமையிலான குழுவினா் பள்ளி மாணவியருக்கு சுய பாதுகாப்பு, திருமண வயது, பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம், இளம்வயது திருமணத் தடைச் சட்டம், சமூக ஊடகங்களின் பயன்பாடு, சைபா் கிரைம் குற்றங்கள் தடுப்புச் சட்டம் போன்றவை குறித்து புதன்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

பள்ளி தலைமையாசிரியை ஆ.சின்னமணி உள்பட ஆசிரியைகள் உடனிருந்தனா். 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான 700 மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.