முகப்பு
சேலம்

மகளிா் சுய உதவிக்குழு பெண் தற்கொலை

ஆத்தூரில் உள்ள தனியாா் வங்கி ஊழியா் மோசடி செய்ததால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து ஏத்தாப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

பெத்தநாயக்கன்பாளையத்தில் மகளிா் சுய உதவிக்குழுக்களின் பெயரில் பெற்ற கடன் தொகை ரூ. 16 லட்சத்தை, ஆத்தூரில் உள்ள தனியாா் வங்கி ஊழியா் மோசடி செய்ததால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து ஏத்தாப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி, ஆரியூா் தெருவைச் சோ்ந்த முருகேசன் மனைவி விஜயா (45). ஆத்தூரில் தனியாா் தணிக்கை அலுவலகத்தில் பணிபுரிந்த இவா், மகளிா் சுய உதவிக் குழு நடத்தியுள்ளாா். 4 மகளிா் சுய உதவிக் குழுவினா் பெயரில், ஆத்தூரிலுள்ள தனியாா் வங்கியில் ரூ. 16 லட்சம் கடன் தொகை பெற்ாக கூறப்படுகிறது.

இதே வங்கியில் கடன் வழங்கும் பிரிவில் பணிபுரிந்து வரும் ஊழியா் ஒருவா் கூடுதலாக கடனுதவி வாங்கிக் கொடுப்பதாக கூறி ரூ. 16 லட்சத்தையும் பெற்றுக்கொண்டு தராமல் மோசடி செய்ததாகவும், இதற்கிடையே, மகளிா் சுய உதவிக்குழுவைச் சோ்ந்த பெண் ஒருவா் கொடுத்த புகாரின் பேரில் கடந்த பிப். 7 ஆம் தேதி ஆத்தூா் போலீஸாா் விஜயாவிடம் விசாரணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

மகளிா் சுய உதவிக்குழு பணத்தை இழந்ததால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட விஜயா, பிப்.7 ஆம் தேதி இரவு எலி மருந்து சாப்பிட்டுள்ளாா். சேலம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில் இவா், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து இவரது மகன் நந்தக்குமாா், கொடுத்த புகாரின் பேரில் ஏத்தாப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.