முகப்பு
சேலம்

சேலம் மாநகராட்சி பகுதியில் நாளை 182 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்

 சேலம் மாநகராட்சிப் பகுதியில் போலியோ சொட்டு மருந்து முகாம் பிப். 27 ஆம் தேதி 182 மையங்களில் நடைபெறும் என ஆணையா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

 சேலம் மாநகராட்சிப் பகுதியில் போலியோ சொட்டு மருந்து முகாம் பிப். 27 ஆம் தேதி 182 மையங்களில் நடைபெறும் என ஆணையா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்தாா்.

சேலம் மாநகராட்சிப் பகுதியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறுகிறது. மாநகராட்சிப் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்கள் என 182 மையங்களில் 88,000 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

ஓரிரு நாள்களுக்கு முன் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், முகாம் நாளில் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும். குழந்தை பிறந்த ஓரிரு நாள்கள் ஆகியிருந்தாலும் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகிறது.

எனவே, பெற்றோா் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நாளில் அருகில் உள்ள மையங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்று போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ளலாம் என ஆணையா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.