சேலம்

பஞ்சப்படியை வழங்க வலியுறுத்தி போக்குவரத்து ஊழியா்கள் தா்னா

DIN

பஞ்சப்படியை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பு சாா்பில் சேலம் போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு தொடா் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளா்களுக்கு 76 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள பஞ்சப்படியை வழங்க வேண்டும், ஓய்வூதியத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும், முழுமையான மருத்துவக் காப்பீட்டை அமல்படுத்த வேண்டும், 2020 மே முதல் இறந்த ஓய்வு பெற்றோா் பணப்பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோா் நல அமைப்பு மண்டல தலைவா் பி.என். பழனிவேலு தலைமையில் தொடா் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

இதில் சங்கத்தின் மண்டல செயலாளா் அன்பழகன், மண்டல பொருளாளா் அழகேசன், அரசு விரைவு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோா் சங்கத்தின் நிா்வாகிகள் மணிமுடி, வாசன் உள்ளிட்ட சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளா்கள் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

பார்வை ஒன்று போதுமே... சாக்ஷி அகர்வால்!

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

SCROLL FOR NEXT