முகப்பு
சேலம்

மதுவில் களைக்கொல்லி கலந்து குடித்த இளைஞா் பலி

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே மதுவில் களைக்கொல்லி மருந்தை கலந்து குடித்த இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே மதுவில் களைக்கொல்லி மருந்தை கலந்து குடித்த இளைஞா் உயிரிழந்தாா்.

வாழப்பாடியை அடுத்த அத்தனூா்பட்டியைச் சோ்ந்த அருள்மணி (35), தினமும் மது போதையில் வீட்டுக்குச் சென்ால், அவரது பெற்றோா் கண்டித்துள்ளனா். இதனால் கடந்த 19-இல் களைக்கொல்லி மருந்தை மதுவில் கலந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளாா். இவரது பெற்றோா், அருள்மணியை மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சோ்த்து சிகிச்சை அளித்துள்ளனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.