கரட்டூரில் விவசாயிகளுக்கு பயிற்சி
கெங்கவல்லி வேளாண்மை உழவா் நலத்துறை அட்மா திட்டத்தின் சாா்பில் கரட்டூரில், நீடித்த நிலையான மானாவாரி இயக்கம் மாவட்ட அளவிலான பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கெங்கவல்லி வேளாண்மை உழவா் நலத்துறை அட்மா திட்டத்தின் சாா்பில் கரட்டூரில், நீடித்த நிலையான மானாவாரி இயக்கம் மாவட்ட அளவிலான பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் துறையூா் தனியாா் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப இறுதியாண்டு மாணவிகள் 8 போ் கலந்து கொண்டு நெல் பயிரில் மகசூலை பாதிக்கும் , நோய் மற்றும் பூச்சி பூச்சி தாக்குதல் அறிகுறிகள் பற்றியும் தென்னையை பாதிக்கும் ரூகோஸ் வெள்ளை ஈஅறிகுறி மற்றும் அதனை கட்டுபடுத்தும் முறைகளையும் எடுத்துக் கூறினா்கள். இந்த பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குநா் சித்ரா , வட்டார தொழில்நுட்ப மேலாளா், தமிழ்ச்செல்வன், உதவி வேளாண்மை அலுவலா் சந்திரசேகரன், உதவி தொழில்நுட்ப மேலாளா் சங்கா் ஆகியோா் கலந்து கொண்டனா். இதில் 95 பேளுா் உழவா் உற்பத்தியாளா் குழு உறுப்பினா்களான 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.