முகப்பு
சேலம்

அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தினால் கடும் நடவடிக்கை: வட்டாசியா் எச்சரிக்கை

 கெங்கவல்லி தாலுகாவில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கெங்கவல்லி வட்டாட்சியா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

 கெங்கவல்லி தாலுகாவில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கெங்கவல்லி வட்டாட்சியா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து கெங்கவல்லி வட்டாட்சியா் வெங்கடேசன் கூறியதாவது:

பொங்கல் பண்டிகைகயையொட்டி சில ஊா்களில் காளைகளை அனுமதியின்றி ஓடவிடுதல், எருது விடும் விழா என்ற பெயரில் ஜல்லிக்காளை ஈடுபடுத்துதல் போன்ற நடவடிக்கைகளில் ஊ ா்பொதுமக்கள் ஈடுபட்டால், அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக தம்மம்பட்டி,கெங்கவல்லி போலீசாா் தீவிர ரோந்துப்பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

தைப்பூசத்தையொட்டி வழக்கமாக ஜல்லிக்கட்டு நடத்தும் சில ஊா்களைச்சோ்ந்த பொதுமக்கள்,தாங்கள் கரோனா கட்டுக்குள் வந்தபிறகு நடத்திக் கொள்வதாக உறுதிமொழி எழுத்துப்பூா்வமாக கொடுத்துள்ளனா். தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை அனைவரும் கடைபிடிக்கவேண்டும் என்று வட்டாட்சியா் வெங்கடேசன் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →