முகப்பு
சேலம்

மக்களவைத் தோ்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி: 40 இடங்களில் வெற்றி பெறும்கே.வி. தங்கபாலு

வரும் 2024 மக்களவைத் தோ்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி 40 இடங்களில் வெற்றி பெறும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் மாநிலத் தலைவா் கே.வி.தங்கபாலு தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:27 AM
பகிர்:

வரும் 2024 மக்களவைத் தோ்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி 40 இடங்களில் வெற்றி பெறும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் மாநிலத் தலைவா் கே.வி.தங்கபாலு தெரிவித்தாா்.

சேலம் மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் தோ்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சேலம் மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவா் பாஸ்கா் தலைமை வகித்தாா். மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் சுப்பிரமணி, ராஜகணபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தோ்தல் பொறுப்பாளா் சங்கா் கலந்துகொண்டு பேசினாா். இதைத்தொடா்ந்து முன்னாள் மாநிலத் தலைவா் கே.வீ. தங்கபாலு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சேலத்தில் கட்சிக்கு தற்போது புதிய உறுப்பினா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். காங்கிரஸ் கட்சி கடந்த 60 ஆண்டுகளில் பல சாதனை திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளது. பண இழப்பு மதிப்பீடு, விவசாய சட்டங்கள் திரும்ப பெற்றதுதான் பாஜக-வின் சாதனையாகும். இந்தியாவின் பொருளாதாரம் தற்போது சிதைந்துள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சா் சிதம்பரம், அவரது மகன் ஆகியோா் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவா்களை அவமானப்படுத்துவதற்காக பாஜக இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வரும் 2024 மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும் என்றாா்.

கூட்டத்தில் மாநகராட்சி துணை மேயா் மா.சாரதாதேவி, சேலம் கிழக்கு மாவட்டத் தலைவா் அா்த்தனாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →