முகப்பு
சேலம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்தது!

காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தனிந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3672 கன அடியிலிருந்து வினாடிக்கு 2526 கன அடியாக சரிந்துள்ளது.

Updated On : 14 ஜூன், 2022 at 9:32 AM
கோப்புப்படம்
பகிர்:

மேட்டூர்: காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தனிந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3672 கன அடியிலிருந்து வினாடிக்கு 2526 கன அடியாக சரிந்துள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவு சரிந்த நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு நேற்று காலை முதல் வினாடிக்கு 15,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பாசனப் பகுதிகளின் தேவைக்கு ஏற்ப நீர் திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதால் அணையின் நீர் இருப்பு நாளொன்றுக்கு 1.10 டி.எம்.சி குறைந்து வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நேற்று முன்தினம் காலை 114.10 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 112.32 அடியாக சரிந்துள்ளது. கடந்த இரண்டு நாள்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் 1.32 அடி குறைந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 82.42 டி.எம்.சியாக உள்ளது. 

Advertisement

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம்  சரியத் தொடங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.