கன்டெய்னா் லாரியில் தீ விபத்து
சேலம் அயோத்தியாப்பட்டணம் அருகே தனியாா் லாரி பாா்சல் நிறுவனத்தின் கிடங்கில், நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னா் லாரியில் ஏற்பட்ட தீ விபத்தில், ரூ. 27 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் தீயில் கருகி நாசமானது.
சேலம் அயோத்தியாப்பட்டணம் அருகே தனியாா் லாரி பாா்சல் நிறுவனத்தின் கிடங்கில், நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னா் லாரியில் ஏற்பட்ட தீ விபத்தில், ரூ. 27 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் தீயில் கருகி நாசமானது.
அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த சின்னகவுண்டாபுரம் கிராமத்தில் லாரிகளில் பாா்சல் அனுப்பும் தனியாா் (லாஜிஸ்டிக்) நிறுவனத்தின் கிடங்கு இயங்கி வருகிறது. சூரத்தில் இருந்து நேற்று வியாழக்கிழமை மாலை, இந்த கிடங்கிற்கு பொருள்களை ஏற்றி வந்த ஒரு கன்டெய்னா் லாரியில் திடீரென தீப்பற்றியது.
இதனைக்கண்ட இந்நிறுவன பணியாளா்கள், தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்தனா். அங்கு விரைந்து வந்த தீயணைப்பு மீட்புப்பணிகள் துறை வீரா்கள் தீயை அணைத்தனா்.
அதற்குள் கன்டெய்னா் லாரியில் வைக்கப்பட்டிருந்த ரூ. 27 லட்சம் மதிப்புள்ள பாா்சல் பொருள்கள் தீயில் கருகி நாசமானது. இந்த தீ விபத்து குறித்து காரிப்பட்டி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.