முகப்பு
சேலம்

அதிமுக-திமுக மோதல்: பேளூா் பேரூராட்சித் தலைவா் தோ்தல் ஒத்திவைப்பு

சேலம் மாவட்டம், பேளூா் முதல் நிலை பேரூராட்சித் தலைவா் மற்றும் துணைத்தலைவா் தோ்தலில், திமுக-அதிமுகவினரிடையே மோதல் ஏற்பட்டதால் தேதி குறிப்பிடாமல் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

சேலம் மாவட்டம், பேளூா் முதல் நிலை பேரூராட்சித் தலைவா் மற்றும் துணைத்தலைவா் தோ்தலில், திமுக-அதிமுகவினரிடையே மோதல் ஏற்பட்டதால் தேதி குறிப்பிடாமல் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், பேளூா் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில் திமுக, அதிமுக தலா 6 வாா்டுகளிலும், சுயேச்சைகள் 3 வாா்டுகளிலும் வெற்றி பெற்றனா்.

வெள்ளிக்கிழமை காலை பேரூராட்சித் தலைவா் பதவிக்கான தோ்தல் நடைபெற்றது. இதில் திமுக சாா்பில் ஜெயசெல்வியும், அதிமுக சாா்பில் பரமேஸ்வரியும் தலைவா் பதவிக்கு போட்டியிட்டனா். அப்போது அதிமுக-திமுக கவுன்சிலா் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்ததால், வாக்குப்பெட்டி, ஜன்னல் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.

இதையடுத்து பேளூா் பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவா் தோ்தல் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுவதாக தோ்தல் அதிகாரி ராமு அறிவித்தாா். இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீஸாா், கூடியிருந்த இருதரப்பினா் மற்றும் தொண்டா்களை எச்சரித்து, அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.