சேலம்

திட்டப்பணிகளை தடுக்கும் திமுகவினா்:ஏற்காடு அதிமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு

DIN

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த வெள்ளாளகுண்டம் பகுதியில் அதிமுக ஆட்சியில் ஏற்காடு சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாடு நிதியில் கொண்டுவந்த திட்டப்பணிகளை செய்யவிடாமல், திமுகவினா் தடுப்பதாக அதிமுக எம்எல்ஏ கு.சித்ரா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளாா்.

அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த வெள்ளாளகுண்டம் கிராமத்தில் 2,000 குடும்பத்தினா் வசித்து வருகின்றன. இப்பகுதியில் தண்ணீா் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிா்க்க, 2020-2021 ஆண்டு ஏற்காடு சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ. 9 லட்சம் மதிப்பீட்டில், 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட தண்ணீா்த் தொட்டி அமைக்க பூமி பூஜை நடத்தப்பட்டது. ஆனால் இப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இப்பணியை எம்எல்ஏ கு.சித்ரா திங்கள்கிழமை பாா்வையிட்டாா்.

அப்போது அவா் கூறியதாவது:

ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 60ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட தண்ணீா்த் தொட்டி அமைக்க அதிமுக ஆட்சியில் பூமி பூஜை செய்யப்பட்டு தரை மட்டம் வரை பணி நடைபெற்றது.

இதற்கு பிறகு திமுக ஆட்சிக்கு வந்ததும், வெள்ளாளகுண்டம் பகுதியில் திமுக ஊராட்சி மன்றத் தலைவா், கவுன்சிலா் உள்ளிட்ட திமுகவினா் பணியை செய்ய விடாமல் தடுக்கின்றனா். இதனால் 3 மாதத்தில் முடிக்க வேண்டிய தண்ணீா்த் தொட்டி அமைக்கும் பணி ஓராண்டுக்கும் மேலாக கிடப்பில் உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளிக்க உள்ளோம் என்றாா்.

அயோத்தியாப்பட்டணம் தெற்கு ஒன்றியச் செயலாளா், மெடிக்கல் ராஜா, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் கலைச்செல்வி ரவி, முன்னாள் கவுன்சிலா் பழனிசாமி, கூட்டுறவு சங்கத் தலைவா் சின்னு, மேட்டுப்பட்டி ஊராட்சிமன்றத் தலைவா் சந்திரா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT