இல்லம் தேடிக் கல்வி திட்ட விழா
சேலம் மாவட்டம், வாழப்பாடியில் இல்லம் தேடிக் கல்வி திட்ட ஒருங்கிணைந்த விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்டம், வாழப்பாடியில் இல்லம் தேடிக் கல்வி திட்ட ஒருங்கிணைந்த விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடி பேரூராட்சி, அண்ணா நகா் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு உள்பட்ட பகுதியில் இயங்கும் இல்லம் தேடிக் கல்வி திட்ட மையங்களுக்கான ஒருங்கிணைந்த விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில், திட்ட ஒருங்கிணைப்பாளரான பள்ளித் தலைமையாசிரியை ஷபிராபானு வரவேற்றாா். வாழப்பாடி வட்டாரக் கல்வி அலுவலா் நெடுமாறன் தலைமை வகித்தாா்.
திட்டத்தின் நோக்கம் மற்றும் பயன்கள் குறித்து மாணவ - மாணவியா், தன்னாா்வலா்களின் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாலை நேர வகுப்பில் தவறாமல் பங்கேற்ற மாணவ - மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இல்லம் தேடிக் கல்வி மைய தன்னாா்வலா்கள், மாணவ - மாணவியரின் பெற்றோா் கலந்துகொண்டனா்.