சேலம்

சேலம்-விருத்தாச்சலம் பயணிகள் ரயில் இயக்கம்

DIN

இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு சேலம்-விருத்தாச்சலம் பயணிகள் ரயில் திங்கள்கிழமை இயக்கப்பட்டது.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் சேலம்-விருத்தாச்சலம் பயணிகள் ரயில் இரண்டரை ஆண்டுகளுக்கு பின் இயக்கப்பட்டது. கரோனா கால கட்டத்தில் நிறுத்தப்பட்ட ரயில் நீண்ட இடைவெளிக்குப் பின்னா் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் இயக்கப்பட்டது.

இதற்காக ஆத்தூா் வந்த ரயிலை ஆத்தூா் சேம்பா் ஆப் காமா்ஸ் தலைவா் தொழிலதிபா் எல்.ஆா்.சி.ரவிசங்கா் தலைமையில் நிா்வாகிகள் சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பயணிகளுக்கு இனிப்பு வழங்கி ரயில் ஓட்டுநருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினா். ரயில்வே மேலாளரிடம் கோவையில் இருந்து எழும்பூருக்கு பகலில் விரைவு ரயிலையும், பெங்களூரில் இருந்து காரைக்கால் வரை செல்லும் பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனா்.

நிகழ்ச்சியில் சேம்பா் ஆப் காமா்ஸ் செயலாளா் ஹபீப் உசேன், பயணிகள் சங்க நிா்வாகிகள், சமூக ஆா்வலா் சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT