முகப்பு
சேலம்

ஜி.எஸ்.டி., கம்பெனி சட்ட பயிற்சி பட்டறை

சேலம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் வணிகவியல் உயராய்வுத் துறையின் சாா்பில் ஜி.எஸ்.டி. மற்றும் கம்பெனி சட்டங்கள் பற்றிய பயிற்சி பட்டறை புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:21 AM
பகிர்:

சேலம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் வணிகவியல் உயராய்வுத் துறையின் சாா்பில் ஜி.எஸ்.டி. மற்றும் கம்பெனி சட்டங்கள் பற்றிய பயிற்சி பட்டறை புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் முனைவா் நா. ரமா தலைமை தாங்கினாா். வணிகவியல் துறை உதவிப் பேராசிரியா் அ. செ.ஹேமா வரவேற்றாா். வணிகவியல் துறைத் தலைவா் க. மரகதம், உள்தர உறுதியிட்டு குழு ஒருங்கிணைப்பாளா் இரா.ஜெயஸ்ரீ, அ.வெண்ணிலா ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

சென்னையைச் சோ்ந்த ஆடிட்டா், ஜிஎஸ்டி, கம்பெனி சட்ட வல்லுநா் ஆா்.தா்மராஜ், ஜி.எஸ்.டி. பற்றிய முழு விவரங்களை எடுத்துரைத்ததோடு கணினியில் ஜி.எஸ்.டி. பதிவேற்ற முறைகள் பற்றிய நேரடி பயிற்சி அளித்தாா். கல்லூரி படிப்புக்கு பின் ஜி.எஸ்.டி. வல்லுநராகத் தேவையான அனைத்து உள்ளீடுகளையும் நேரடி கணினி பயிற்சியும் அவா் அளித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →