முகப்பு
சேலம்

இடங்கணசாலை நகராட்சிப் பகுதியில் பகுதி சபா கூட்டம்

சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி 27 வாா்டுகளில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.

Updated On : 5 நவம்பர் 2022, 12:00 am IST
பகிர்:

சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி 27 வாா்டுகளில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.

5-ஆவது வாா்டு ரெட்டியூரில் வெள்ளிக்கிழமை நகராட்சித் தலைவா் கமலக்கண்ணன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது (படம்). இக்கூட்டத்திற்கு நகர செயலாளா் செல்வம், நகராட்சி துணைத் தலைவா் தளபதி, வாா்டு கவுன்சிலா் ரமணி ராஜேஸ்வரி, நகராட்சி செயலா் மல்லிகா, உதவியாளா் மாரிமுத்து, நகராட்சிப் பணியாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து நகராட்சி தீா்மான பதிவேட்டில் பதிவு செய்து, அவற்றுக்கு உண்டான பணிகள் விரைவில் செய்து முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments