FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தேரோட்டம்! தேர் குடை சரிந்ததால் பரபரப்பு!

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தேரோட்டத்தின்போது தேர் குடை சரிந்தது பற்றி...

Updated On : 1 ஜூலை 2026, 10:45 am IST
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தேர் குடை சரிந்தது.. - X
பகிர்:

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தேரோட்டத்தின்போது தேரின் உச்சியில் இருந்த கொடையுடன் கலசம் திடீரென சரிந்ததால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயில் ஆனி மாத பிரம்மோற்சவ விழா 10 நாள்கள் நடைபெறும் நிலையில் 7-ம் நாளான இன்று (புதன்கிழமை) தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணன் தேரை வடம்பிடித்து தொடக்கிவைத்தார்.

அப்போது மாட வீதியில் தேர் வந்துகொண்டிருந்தபோது திடீரென தேரின் உச்சியில் இருந்த கொடை மற்றும் கலசம் சரிந்தது. வீதியில் மேலே சென்ற கேபிள் வயர் தட்டியதால் கலசம் சரிந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதையடுத்து உடனடியாக கோயில் அர்ச்சகர்கள் மேலே ஏறி அதனை சரிசெய்தனர். இதனால் சிறிது நேரம் தேரோட்டம் தடைபட்டது.

summary

Thiruvallikeni Parthasarathy Temple Chariot function

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments