முகப்பு
தமிழ்நாடு

மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம்: அரசு நடவடிக்கை எடுக்க பிரேமலதா வலியுறுத்தல்

மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ படிப்பிற்கு 5 ஆண்டு கட்டணம் வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை குறித்து...

Updated On : 1 ஜூலை 2026, 10:43 am IST
பிரேமலதா - கோப்புப்படம்
பகிர்:

மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ படிப்பிற்கு 5 ஆண்டு கட்டணம் வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள் மீது தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளரும் பேரவை உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.

Advertisement

Advertisement

தேசிய மருத்துவ ஆணையம் விதிமுறைப்படி கல்லூரிகள் 5 அல்லது ஐந்தரை ஆண்டுகளுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் திட்டவட்டமாகக் கூறியுள்ளன.

எம்பிபிஎஸ் படிப்பின் கல்விக்காலம் நான்கரை ஆண்டுகள் மட்டுமே. ஆனால், சில மருத்துவக் கல்லூரிகள் ஐந்து ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணத்தை வசூலிப்பதாக கூறப்படுகிறது. இது மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் கூடுதல் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்துவதுடன், நியாயமான நடைமுறையாகவும் தெரியவில்லை.

எனவே, விதிமுறைகளை மீறி கூடுதல் கட்டணம் அல்லது நான்கரை ஆண்டுகள் மட்டுமே கல்விக்காலம் இருந்தும் ஐந்தாண்டுகளுக்கான கட்டணத்தை வசூலிக்கும் மருத்துவக் கல்லூரிகள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், மருத்துவக் கல்வித் துறை மற்றும் அதனைத் சார்ந்த அமைச்சர் இந்த விவகாரத்தை நேரடியாகக் கண்காணித்து, இனி இதுபோன்ற தவறுகள் எந்த மருத்துவக் கல்லூரிகளிலும் நடைபெறாத வகையில் கடுமையான கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

summary

Excess fees in medical colleges: Premalatha urges government to take action

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments