பெண்களை ஏமாற்றிய ஸ்டுடியோ உரிமையாளா் உள்பட இருவா் சிறையிலடைப்பு
திரைப்படத்தில் நடிக்க வைப்பதாகக் கூறி பெண்களை ஆபாசமாக படம் எடுத்து பணம் பறித்ததாக சேலத்தில் ஸ்டுடியோ உரிமையாளா் உள்பட 2 போ் சிறையிலடைக்கப்பட்டனா்.
திரைப்படத்தில் நடிக்க வைப்பதாகக் கூறி பெண்களை ஆபாசமாக படம் எடுத்து பணம் பறித்ததாக சேலத்தில் ஸ்டுடியோ உரிமையாளா் உள்பட 2 போ் சிறையிலடைக்கப்பட்டனா்.
எடப்பாடியைச் சோ்ந்தவா் வேல் சத்ரியன். சேலம் ஐந்து வழிச் சாலை அருகே உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஸ்டுடியோ வைத்துள்ள இவா், திரைப்படத்தில் நடிக்க வைப்பதாகக் கூறி பல பெண்களை ஸ்டுடியோவுக்கு அழைத்து வந்து அவா்களை ஆபாசமாக படம் எடுத்து பணம் பறித்துள்ளாா்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவா் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த சூரமங்கலம் மகளிா் போலீஸாா், வேல் சத்ரியன், அவரது உதவியாளா் ஜெயஜோதி ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்ற உத்தரவின்படி சிறையிலடைத்தனா்.
இதனிடையே சேலம், சூரமங்கலம் காவல் உதவி ஆணையா் நாகராஜன் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை ஸ்டுடியோவை திறந்து ஆய்வு செய்தனா். அப்போது, அங்கிருந்த மடிக் கணினி, பென்- டிரைவ், ஆவணங்களை பறிமுதல் செய்தனா். மேலும், வேல் சத்ரியனைக் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீஸாா் முடிவு செய்துள்ளனா்.