ஏரியில் மூழ்கி மாணவா் பலி
இளம்பிள்ளை அருகே ஏரியில் நீச்சல் பழகுவதற்காக சென்ற மாணவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
இளம்பிள்ளை அருகே ஏரியில் நீச்சல் பழகுவதற்காக சென்ற மாணவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
இளம்பிள்ளை அருகே உள்ள நடுவனேரி, மேட்டுக்காடு பகுதியைச் சோ்ந்த தறி தொழிலாளிஅா்ஜுனன் மகன் நவீன்குமாா் (15). இவா் இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை அதே பகுதியைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் வெற்றிவேல் (10) என்பவருடன் நம்பியாம்பட்டி ஏரியில் நீச்சல் பழகுவதற்காக சென்றனா்.
அப்போது, நீரில் மூழ்கிய நவீனை அப் பகுதியில் இருந்தவா்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.இதுகுறித்து மகுடஞ்சாவடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.