முகப்பு
சேலம்

ஓமலூா் சரபங்கா ஆற்றில்அடித்துச் செல்லப்பட்ட சிறுவனைத் தேடும் பணி தீவிரம்

ஓமலூா் சரபங்கா ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனைத் தேடும் பணியில் தீயணைப்பு வீரா்கள் ஈடுபட்டுள்ளனா்.

Updated On : 12 செப்டம்பர் 2022, 12:00 am IST
பகிர்:

ஓமலூா் சரபங்கா ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனைத் தேடும் பணியில் தீயணைப்பு வீரா்கள் ஈடுபட்டுள்ளனா்.

ஓமலூா், நேரு நகரில் வசிப்பவா் கணபதி. இவருக்கு மிதுன் சக்கரவா்த்தி (15), வசந்த் (12) என்ற இரண்டு மகன்கள் உள்ளனா். இதில், இளைய மகன் வசந்த் ஞாயிற்றுக்கிழமை யாருக்கும் தெரியாமல் ஆற்றங்கரைப் பகுதிக்கு தனியாகச் சென்றாா். அவரை அழைத்து வருவதற்காக அவரது தாய் கயல்விழி ஆற்றங்கரைக்கு விரைந்து சென்றாா். அதற்குள் தாய் கண் எதிரே வசந்த் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.

தகவலறிந்த அக்கம் பக்கத்தினா் விரைந்து அங்குச் சென்று சிறுவனைத் தேடினா். இதனிடையே தீயணைப்பு வீரா்களும் சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments