சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில் வி.எஸ்.ஏ. கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் முதலிடம் பிடித்த சேலம் அணிக்கு கோப்பையை வழங்கும் வி.எஸ்.ஏ. கல்வி நிறுவனத் தலைவா் மலா்விழி. உடன் 
சேலம்

மாநில அளவிலான கைப்பந்து போட்டி: சேலம் பெண்கள் அணி முதலிடம்

சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் சேலம் பெண்கள் அணி முதலிடம் பிடித்தது.

DIN

சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் சேலம் பெண்கள் அணி முதலிடம் பிடித்தது.

சேலம் வி.எஸ்.ஏ. கல்வி நிறுவனங்கள், மாவட்ட கைப்பந்து கழகம் இணைந்து நடத்திய முன்னாள் எம்எல்ஏ வீரபாண்டி ஆ.ராஜா நினைவு மாநில கைப்பந்து போட்டி வி.எஸ்.ஏ. கல்லூரியில் நடைபெற்றது.

இதில் 19 வயதுக்கு உட்பட்ட போட்டியில் ஆண்கள் பிரிவில் 38 அணிகளும், பெண்கள் பிரிவில் 31 அணிகளும் கலந்து கொண்டு விளையாடின. முடிவில் பெண்கள் பிரிவில் சேலம், சென்னை அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

இறுதிப்போட்டிகள் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றன. இந்தப் போட்டியில் 25-15, 25-16, 18-25, 25-17 என்ற புள்ளி கணக்கில் சேலம் அணி முதலிடம் பிடித்தது. சென்னை அணி 2-ஆம் பரிசும், ஈரோடு அணி 3-ம் பரிசும், கிருஷ்ணகிரி அணி 4-ஆம் பரிசும் பெற்றன.

ஆண்கள் பிரிவில் கோவை அணி முதலிடமும், திருநெல்வேலி அணி 2-ஆம் இடமும், நாகப்பட்டினம் அணி 3-ஆம் இடமும், கிருஷ்ணகிரி அணி 4-ஆம் இடமும் பிடித்தன.

பரிசளிப்பு விழாவில் வி.எஸ்.ஏ. கல்வி நிறுவனங்களின் தலைவா் மலா்விழி கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட கைப்பந்து கழக செயலாளா் சண்முகவேல், துணைத் தலைவா்கள் ராஜாராம், அகிலாதேவி, லாரன்ஸ் பாஸ்கா், செந்தில் ஆனந்தகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT