மனைவி எரித்து கொலை: கணவா் கைது
மேட்டூா் அருகே மனைவியை எரித்து கொலை செய்த கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
மேட்டூா் அருகே மனைவியை எரித்து கொலை செய்த கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
மேட்டூா் அருகே உள்ள சேலம் கேம்ப் சாஸ்திரி நகரைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் (50). தொழிலாளி. இவரது இரண்டாவது மனைவி தமிழ்ச்செல்வி (37). இருவருக்கும் 17 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனா். தமிழ்ச்செல்விக்கு அவரது உறவினா் ஒருவருடன் தகாத உறவு இருந்ததாக கடந்த 24ஆம் தேதி தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணன் வீட்டில் பெயின்டில் கலக்க வைத்திருந்த தின்னரை தமிழ்ச்செல்வி மீது ஊற்றி தீ வைத்தாா். பலத்த தீக்காயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ்ச்செல்வி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இச் சம்பவம் தொடா்பாக கருமலைக் கூடல் காவல் ஆய்வாளா் குமரன் வழக்குப் பதிவு செய்து ராமகிருஷ்ணனை வெள்ளிக்கிழமை கைது செய்து மேட்டூா் குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் எண் 2-இல் ஆஜா்படுத்தினாா். பின்னா் அவா் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.