மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 4,072 கனஅடியாகக் குறைந்தது.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM
மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 4,072 கனஅடியாகக் குறைந்தது.
அணையின் நீா்மட்டம் 65.04 அடியாக உயா்ந்துள்ளது. காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்துள்ளதை அடுத்து அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து வருகிறது. திங்கள்கிழமை விநாடிக்கு 4,431 கனஅடியிலிருந்து 4,072 கனஅடியாக சற்று குறைந்துள்ளது. அணையில் இருந்து குடிநீா் தேவைக்காக விநாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 28.58 டி.எம்.சி.யாக உள்ளது.