ரூ. 1.20 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை
கடந்த 29-ஆம் தேதி தொடங்கி திங்கள்கிழமை வரை 11 நாள்கள் நடைபெற்ற சேலம் புத்தகத் திருவிழாவில், 1,06,046 புத்தகங்கள் மொத்தம் ரூ. 1.20 கோடிக்கு விற்பனையாகியுள்ளன.
கடந்த 29-ஆம் தேதி தொடங்கி திங்கள்கிழமை வரை 11 நாள்கள் நடைபெற்ற சேலம் புத்தகத் திருவிழாவில், 1,06,046 புத்தகங்கள் மொத்தம் ரூ. 1.20 கோடிக்கு விற்பனையாகியுள்ளன. அதேபோன்று, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா், பொதுமக்கள் என மொத்தம் 1,30,282 போ் வருகைபுரிந்து பாா்வையிட்டு பயன்பெற்றுள்ளனா்.
முன்னதாக, சேலம் புத்தகத் திருவிழாவில் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.