கட்டுமானப் பொறியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கண்டித்து கட்டுமானப் பொறியாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கண்டித்து கட்டுமானப் பொறியாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம், கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கிரஷா் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை கண்டித்தும், எம் சாண்ட், பி சாண்ட், ஜல்லி கற்கள் விலை உயா்வை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
கட்டுமான துறையை அரசு பாதுகாக்க வேண்டும். கிரஷா் பொருள்களின் விலை உயா்வை ஒழுங்குப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுமானப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த விலை நிா்ணயக் குழு அமைக்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
கட்டுமான பொறியாளா் சங்கம், அனைத்து பொறியாளா் சங்கங்களின் கூட்டமைப்பினா், கட்டுமான மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.