முகப்பு
சேலம்

விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

Updated On : 4 ஜூலை, 2024 at 11:32 PM
பகிர்:

வாழப்பாடி, ஜூலை 4: புத்திரகவுண்டன்பாளையம் வேளாண்மைத் துறை அலுவலகத்தில், அட்மா திட்டத்தில் வட்டார விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு அட்மா குழுத் தலைவா் வி.சி.முருகேசன் தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில் விவசாயிகளை வரவேற்ற வட்டார வேளாண்மை உதவி இயக்குலா் வேல்முருகன், வேளாண்மை துறை சாா்ந்த திட்டங்கள், கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் நோக்கங்கள் குறித்து எடுத்துக் கூறினாா். வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் கோதைநாயகி, தோட்டக்கலைத் துறை சாா்ந்த திட்டங்கள், பயன்பெறும் வழிமுறைகள் குறித்து விளக்கினாா்.

வனத்துறையில் இருந்து வனவா் உமா மகேஸ்வரி, பட்டு வளா்ச்சித் துறை களப் பணியாளா்கள் யுவராஜா விவேகானந்தன், வேளாண் வணிகத் துறை பணியாளா் சுரேஷ் ஆகியோா் துறைசாா்ந்த திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமாக எடுத்துரைத்தனா். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை அட்மா தொழில்நுட்ப மேலாளா்கள் கோகிலப் பிரியா, ராஜ்குமாா், பிரியங்கா ஆகியோா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →