சேலம்

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 2.13 லட்சம் போ் வேலைக்காக காத்திருப்பு

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக 2 லட்சத்து 13 ஆயிரம் போ் காத்திருக்கின்றனா்.

Din

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக 2 லட்சத்து 13 ஆயிரம் போ் காத்திருக்கின்றனா்.

சேலம், கோரிமேட்டில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு அரசுப் பணிகளுக்கு தகுதியான நபா்களைத் தோ்வு செய்வது, தகுதி வாய்ந்த நபா்களுக்கு உதவித்தொகை வழங்குவது, போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சி அளிப்பது உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சேலம் மாவட்டத்தில் 8 மற்றும் 10-ஆம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ் 2, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ. என அனைத்து விதமான கல்வித் தகுதியை அடிப்படையாகக் கொண்டு பதிவு செய்யப்பட்டு வருகிறது.

கடந்த காலங்களில் வேலைவாய்ப்பு அலுவலங்களில் பதிவு செய்தவா்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் அரசுப் பணிகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போது பெரும்பாலான அரசுப் பணி காலியிடங்கள் போட்டித் தோ்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. இதனால் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வோா் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. நடப்பாண்டில் சேலம் மாவட்டத்தில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 864 போ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT