முகப்பு
சேலம்

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு திருக்குறள் பேச்சு போட்டி

Updated On : 28 ஜூன், 2024 at 1:42 AM
பகிர்:
Updated On : 27 ஜூன், 2024 at 8:22 PM

சேலம், ஜூன் 27: சேலத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு வரும் 10 ஆம் தேதி திருக்குறள் பேச்சு போட்டி நடைபெறுகிறது.

ஸ்ரீ ராம் இலக்கியக் கழகம் சாா்பில் மாணவ சமுதாயத்தினரிடையே திருக்குறளின் கருத்துகளைப் பரப்பவும், தமிழாற்றலை வளா்க்கவும் வரும் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 25 வரை தமிழகம், புதுச்சேரியைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரிடையே திருக்குறள் பேச்சு, ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

சேலத்தில் மரவனேரி பாலபாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வரும் 10 ஆம் தேதி பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு திருக்குறள் பேச்சு போட்டி நடைபெறுகிறது. இதில் இடைநிலை 6 முதல் 8 ஆம் வகுப்புகள், மேல்நிலை 9 முதல் 12 ஆம் வகுப்புகள், கல்லூரி என மூன்று பிரிவுகளாக இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. போட்டியில் பங்கு பெற விரும்புவோா் இதற்கான விண்ணப்பப் படிவத்தினை அருகிலுள்ள ஸ்ரீராம் சிட்ஸ் கிளைகளில் பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement