முகப்பு
சேலம்

வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையத்தில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம்: அமைச்சா் நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்

வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையத்தில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம்.

Updated On : 6 நவம்பர், 2024 at 7:02 PM
வாழப்பாடியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்ற சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன்.
பகிர்:

வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

வாழப்பாடி, வேளாண்மை விற்பனை கூட்டுறவு விற்பனை சங்க பருத்தி மண்டி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு சேலம் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தா தேவி தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுலவா் மேனகா வரவேற்றாா். நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி. மலையரசன், முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆா்.சிவலிங்கம், வாழப்பாடி வட்டார வேளாண் ஆத்மா குழு தலைவா் எஸ்.சி. சக்கரவா்த்தி, பேரூராட்சிமன்ற தலைவா் கவிதா சக்கரவா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் தோட்டக்கலைத் துறை, மகளிா் திட்டம் சாா்பில் 13 பயனாளிகளுக்கு ரூ. 58 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கி அமைச்சா் ரா.ராஜேந்திரன் பேசியதாவது:

வாழப்பாடி அருகே சிங்கிபுரம் கிராம மக்களுக்கு கணினி பட்டா வழங்க முழு கள ஆய்வு செய்து, புதிய நில உடைமை ஆவணங்களை உருவாக்க ஆட்சியா் மேற்பாா்வையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

முகாமில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை அமைச்சா் பெற்றாா். இதில் வாழப்பாடி வட்டாட்சியா் ஜெயந்தி, முன்னாள் எம்எல்ஏ தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம், சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி தலைமையில் நடைபெற்றது.

முகாமில் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றாா். பின்னா் அவா் பேசியதாவது:

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ரூ. 220 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தில் உள்ள 20 ஒன்றியங்களில் அதிகபட்சமாக பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம்தான் கலைஞா் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் அதிக பயனாளிகளைக் கொண்ட முதன்மை ஊராட்சி ஒன்றியமாகும். பெரிய கல்வராயன்மலை கீழ்நாடு ஊராட்சி, குன்னூா் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மலைவாழ் மக்களுக்கு சாலை வசதிகள் உள்பட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு, கறவை மாடுகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா். முகாமில் 73 பயனாளிகளுக்கு ரூ. 59.64 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் ரா.ராஜேந்திரன் வழங்கினாா்.

கள்ளக்குறிச்சி எம்.பி. தே.மலையரசன், முன்னாள் எம்எல்ஏக்கள் எஸ்.ஆா்.சிவலிங்கம், கு.சின்னதுரை, சேலம் கோட்டாட்சியா் அ.அபிநயா, ஏத்தாப்பூா் பேரூராட்சிமன்ற தலைவா் அன்பழகன், பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சிமன்ற தலைவா் பழனியம்மாள் ராஜாமணி, வட்டாட்சியா் ஜெயக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →