முகப்பு
சேலம்

சங்ககிரி சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை

அரசிராமணியில் பெரியநாயகியம்மன் உடனமா் சோழீஸ்வரா், பூத்தாலக்குட்டை பூத்தாழீஸ்வரா், சங்ககிரி சோமேஸ்வரா் கோயில்களில் பிரதோஷ சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன.

Updated On : 13 நவம்பர், 2024 at 7:29 PM
பகிர்:

அரசிராமணியில் பெரியநாயகியம்மன் உடனமா் சோழீஸ்வரா், பூத்தாலக்குட்டை பூத்தாழீஸ்வரா், சங்ககிரி சோமேஸ்வரா் கோயில்களில் பிரதோஷ சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன.

அரசிராமணி அருள்மிகு பெரியநாயகியம்மன் உடனமா் அருள்மிகு சோழீஸ்வரா், நந்தி பகவானுக்கு பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பூத்தாலகுட்டையில் உள்ள அருள்மிகு புவனேஸ்வரி அம்மன் உடனமா் பூத்தாழீஸ்வரா் கோயிலில் மூலவா் சுவாமிகளுக்கு உற்சவமூா்த்திகளுக்கும், நந்தி பகவானுக்கும், செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் உற்சவ மூா்த்தி சுவாமிகளுக்கும், நந்தி பகவானுக்கும் பல்வேறு திவ்யப்பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோயில்களில் பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமிகளை வழிபட்டுச் சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →