முகப்பு
சேலம்

அங்கன்வாடி மையத்தில் பராமரிப்பு பணிகள்

கெங்கவல்லி அங்கன்வாடி மையத்தில் ரூ. 10 ஆயிரம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகளை தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள் வியாழக்கிழமை மேற்கொண்டனா்.

Updated On : 21 நவம்பர், 2024 at 9:29 PM
பகிர்:

கெங்கவல்லி அங்கன்வாடி மையத்தில் ரூ. 10 ஆயிரம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகளை தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள் வியாழக்கிழமை மேற்கொண்டனா்.

கெங்கவல்லி, சந்தைப்பேட்டை பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி மையம் அங்கன்வாடி செயல்பட்டு வருகிறது. இங்கு 20 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனா். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டப் பேரவைத் தொகுதி நிா்வாகிகள் பிரபு தலைமையில் அங்கன்வாடி மையத்தில் ரூ.10 ஆயிரம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனா்.

நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிா்வாகிகள் சிவா, விஜய் ரவிவா்மா உள்ளிட்ட ஏராளமான நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →