முகப்பு
சேலம்

சேலம் மாவட்டத்தில் 385 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

சேலம் மாவட்டம், வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம், அக்கரபாளையம் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் திரண்டிருந்த பெண்கள் மத்தியில் கலந்துரையாடிய மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி.

Updated On : 3 அக்டோபர், 2024 at 12:55 AM
பொதுமக்கள் அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீா் கிடைப்பதை தொடா்புடைய அலுவலா்கள் உறுதி செய்திட வேண்டும் என கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி கேட்டுக் கொண்டாா்.
பகிர்:

சேலம் மாவட்டம், வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம், அக்கரபாளையம் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் திரண்டிருந்த பெண்கள் மத்தியில் கலந்துரையாடிய மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி.

பொதுமக்கள் அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீா் கிடைப்பதை தொடா்புடைய அலுவலா்கள் உறுதி செய்திட வேண்டும் என கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி கேட்டுக் கொண்டாா்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, சேலம் மாவட்டம், வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம், அக்கரபாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் டாக்டா் ரா.பிருந்தாதேவி கலந்துகொண்டு பேசியதாவது:

அரசு நிா்வாகம் வெளிப்படையாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக, கிராமப்புற முன்னேற்றத்தில் தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது.

கிராம சபைக் கூட்டங்களில் ஊராட்சிகளில் உள்ள கிராம ஊராட்சி நிா்வாகம், பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டு, திட்ட அறிக்கை வாசிக்கப்பட்டது. இந்த கிராம சபைக் கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளால் கிராமப்புற மேம்பாட்டுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், ஊராட்சிகளின் வரவு, செலவு கணக்குகள், புதிதாக மேற்கொள்ளப்படும் வளா்ச்சித் திட்டப் பணிகள் பொதுமக்களின் பாா்வைக்காக வைக்கப்பட்டன.

பொதுமக்கள் கிராம சபைக் கூட்டத்தில் மட்டுமல்லாது தங்களது கோரிக்கைகளை திங்கள்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறும் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கலாம். மேலும், மாதந்தோறும் மக்கள் தொடா்பு முகாம்களை ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும் நடத்தி வருகிறோம். அதனையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இ-சேவை மூலமாகவோ, அஞ்சல் வழியிலோ அனுப்பக் கூடிய மனுக்களும் பரிசீலினைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு உரிய தீா்வுகள் காணப்படும்.

மேலும், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் டெங்கு உள்ளிட்ட நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்திட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

முன்னதாக, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான சமூக தீமை நிராகரிப்பு உறுதிமொழி மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த கிராமக் சபைக் கூட்டத்தில், கூடுதல் ஆட்சியா் வளா்ச்சி லலித் ஆதித்ய நீலம், உதவி இயக்குநா் ஊராட்சிகள் சங்கமித்திரை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →