முகப்பு
சேலம்

தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோா் விண்ணப்பிக்க அழைப்பு

சேலம் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோா் வரும் 21-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.

Updated On : 3 அக்டோபர், 2024 at 12:51 AM
பகிர்:

சேலம் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோா் வரும் 21-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:

வரும் 31-ஆம் தேதியன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் சேலம் மாநகர காவல் எல்லைக்குள்பட்ட இடங்களைத் தவிா்த்து, வெடிபொருள் சட்டமும், விதிகளும் 1884, வெடிபொருள் சட்டம் 2008-இன் கீழ் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க இணையதளத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன.

தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோா் வரும் 21-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அருகில் உள்ள இ-சேவை அல்லது பொது சேவை மையங்களில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →