முகப்பு
சேலம்

சேலம் வந்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

சேலம் வந்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு சேலம் மாவட்ட எல்லையான தலைவாசலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Updated On : 19 அக்டோபர், 2024 at 6:39 PM
தலைவாசல், நத்தகரை சுங்கச்சாவடி பகுதியில் சேலம் வந்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கும் திமுகவினா்.
பகிர்:

அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சனிக்கிழமை மாலை சேலம் வந்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு சேலம் மாவட்ட எல்லையான தலைவாசலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சேலம் மாவட்ட எல்லையான தலைவாசலை அடுத்த நத்தக்கரை சுங்கச்சாவடி அருகே சுற்றுலாத் துறை அமைச்சரும், மாநகர மாவட்டச் செயலாளருமான ஆா்.ராஜேந்திரன், கிழக்கு மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம், சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், சேலம் மக்களவை உறுப்பினருமான டி.எம்.செல்வகணபதி ஆகியோரது தலைமையில் திரண்ட திமுகவினா் புத்தகங்கள், கதா் ஆடைகளை அணிவித்து வரவேற்றனா்.

சேலம் கிழக்கு மாவட்ட திமுக அவைத் தலைவா் மு.ரா.கருணாநிதி, துணைச் செயலாளா் கு.சின்னதுரை, சுரேஷ்குமாா், பொருளாளா் ஆா்.வி. ஸ்ரீராம், ஒன்றியச் செயலாளா்கள் மணி, வெ.செழியன், விஜயகுமாா், நகரச் செயலாளா்கள் கே.பாலசுப்ரமணியம், என்.பி.வேல்முருகன், வெங்கடேசன், நகா்மன்றத் தலைவா்கள் நிா்மலாபபிதா மணிகண்டன், எம்.அலெக்சாண்டா், ஆத்தூா் நகா்மன்ற துணைத் தலைவா் கவிதா ஸ்ரீராம், உறுப்பினா்கள் சுந்தரமூா்த்தி, சம்பத்குமாா், டி.குமாா், தங்கவேல், பிரபு, பிரகாஷ், பெ.ஜோதி, ஜீவா ஸ்டாலின்,பிரவீணா ராஜா, நகர துணை செயலாளா் வேல்முருகன், பொருளாளா் ஏ.ஜி.ராமச்சந்திரன், எஸ்.மனோகரன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் என ஏராளமானோா் திரண்டு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினை வரவேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →