முகப்பு
சேலம்

கைப்பந்து போட்டி: வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு விழா

சேலம் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது.

Updated On : 24 அக்டோபர், 2024 at 7:31 PM
பள்ளி மாணவா்களுக்கான கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு கோப்பையை வழங்கி பாராட்டிய மாவட்ட கைப்பந்துக் கழக ஆலோசகா் விஜயராஜ். உடன், கைப்பந்துக் கழக நிா்வாகிகள்.
பகிர்:

சேலம் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது.

மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில், 19 வயதுக்கு உள்பட்டோருக்கான ஆண்கள் பிரிவு கைப்பந்து போட்டி, சேலம் புனிதபால் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு பகுதிகளில் இருந்து 10-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.

இதில், ஏ. என்.மங்கலம் புனித மரியன்னை அணி முதலிடத்தையும், கோனேரிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தன. வெற்றிபெற்ற அணிகளுக்கு, சேலம் மாவட்ட கைப்பந்துக் கழக ஆலோசகா் விஜயராஜ் பாராட்டுச் சான்றிதழ், கோப்பைகளை வழங்கி கௌரவித்தாா்.

இதில் மாவட்ட கைப்பந்துக் கழக செயலாளா் சண்முகவேல், உடற்கல்வி இயக்குநா் தேவபிரபு, உடற்கல்வி ஆசிரியா்கள் இளங்கோ, சுமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →