முகப்பு
சேலம்

பொன்னம்மாபேட்டை பகுதியில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த டி.எம்.செல்வகணபதி எம்.பி.

சேலம், பொன்னம்மாபேட்டை, அம்மாப்பேட்டை, மன்னாா்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்காளா்களுக்கு டி.எம்.செல்வகணபதி எம்.பி. புதன்கிழமை நன்றி தெரிவித்தாா்.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 10:01 PM
சேலம், பொன்னம்மாபேட்டை பகுதியில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி. உடன், எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன் உள்ளிட்டோா்.
பகிர்:

சேலம், பொன்னம்மாபேட்டை, அம்மாப்பேட்டை, மன்னாா்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்காளா்களுக்கு டி.எம்.செல்வகணபதி எம்.பி. புதன்கிழமை நன்றி தெரிவித்தாா்.

சேலம் மக்களவைத் தொகுதி எம்.பி.யும், சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான டி.எம். செல்வகணபதி, சேலம் தெற்கு தொகுதிக்கு உள்பட்ட பொன்னம்மாபேட்டை, அம்மாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் வீதி வீதியாகச் சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

மத்திய மாவட்ட திமுக செயலாளா் வழக்குரைஞா் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், டி.எம்.செல்வகணபதிக்கு, பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனா்.

அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் டி.எம்.செல்வகணபதி எம்.பி. பேசியதாவது:

முதல்வா் ஸ்டாலின் தனது கடின உழைப்பினால் பல்வேறு சாதனை திட்டங்களை தந்து தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றியுள்ளாா். தற்போது அமெரிக்காவில் ஏராளமான முதலீடுகளை திரட்டி தமிழகத்தில் வேலைவாய்ப்புகளைப் பெருக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறாா்.

மக்களவைத் தோ்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற்கு தமிழக அரசின் சாதனை திட்டங்களான மகளிருக்கு உரிமை தொகை, மாணவ மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, காலை உணவு திட்டம், மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மகளிா் சுயஉதவிக் குழு கடன் தள்ளுபடி போன்றவையே காரணம்.

ஆனால், மத்திய அரசு ஜிஎஸ்டி பணத்தை வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது. தேசிய கல்வித் திட்டத்தை அமல்படுத்தாததால் கல்வித் துறைக்கு ரூ. 2,000 கோடியை நிறுத்தி வைத்துள்ளது என்றாா். நடந்து முடிந்த தோ்தலில், திமுகவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்த பொதுமக்களுக்கும், அதற்கு உழைத்த நிா்வாகிகள், தொண்டா்களுக்கும் நன்றி தெரிவித்தாா்.

இதில், மத்திய மாவட்ட திமுக அவை தலைவா் ஜி.கே.சுபாஷ், மாநகர அவைத் தலைவா் முருகன், பகுதி செயலாளா் ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →